கடந்த 18 வருடங்களுக்கு முன்பு நித்தியானந்தம் மீது கொண்ட தீராத நம்பிக்கை மற்றும் ஆன்மீக ஈடுபாடு காரணமாக கோதை நாச்சியாபுரம் மற்றும் சேத்தூர் ஆகிய பகுதியில் உள்ள சுமார் 40 ஏக்கரு

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வசித்து வருபவர் மருத்துவர் கணேசன் இவர் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு நித்தியானந்தம் மீது கொண்ட தீராத நம்பிக்கை மற்றும் ஆன்மீக ஈடுபாடு காரணமாக கோதை நாச்சியாபுரம் மற்றும் சேத்தூர் ஆகிய பகுதியில் உள்ள சுமார் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை பரமஹம்ச நித்யானந்தர் தியானப்பீடத்திற்கு தானமாக வழங்கியுள்ளார். பின்னர் அவர் வழங்கிய இடத்தில் ஆசிரமம் கட்டிய வாழத் தொடங்கிய நித்தியானந்தரின் சீடர்கள் மற்றும் சிஷ்யைகள் ஆசிரமத்திற்குள் பல்வேறு சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும். தானமாக வழங்கிய நிலங்களை சமூக விரோத செயலுக்கு பயன்படுத்துவதாகவும் தகவல் அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்த மருத்துவர் கணேசன் தானமாக வழங்கிய இடத்தை மீட்டு தரக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீதிமன்றம் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தானமாக வழங்கிய நபர்களும் தானமாக வழங்கிய இடத்தில் பிரவேசித்து வரும் பரமஹம்ச நித்தியானந்தரின் சீடர்கள் மற்றும் சிஷ்யைகள் ஆசிரமத்தில் பிரவேசிக்க கூடாது எனவும் உத்தரவிட்டது. இந்த நிலையில் மருத்துவர் கணேசன் தரப்பினர் அப்பகுதியை விட்டு வெளியேறிய நிலையில் நித்தியானந்தரின் சிஷ்யைகள் மற்றும் சீடர்கள் நீதிமன்ற உத்தரவையும் மீறி தொடர்ந்து ஆசிரமத்தில் வசித்து வந்தனர். இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் தாசில்தார் ராமசுப்பிரமணியன் தலைமையிலான அரசு அதிகாரிகள் மற்றும் ராஜபாளையம் டிஎஸ்பி ப்ரீத்தி தலைமையிலான காவல்துறையினர் நித்யானந்தரின் சிஷ்யைகளை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரு வேறு இடங்களில் உள்ள ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றி ஆசிரமங்களுக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் வெளியேற்றிய அன்று இரவே நித்தியானந்தரின் சிஷ்யைகள் சீல் வைத்த ஆசிரமத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பிரவேசிக்க தொடங்கினர். இதனை அடுத்து தகவல் இருந்து மேலும் காவல்துறையினர் அவர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் நிபந்தனை ஜாமினில் சிஷ்யைகள் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நேற்று இரவு வெளியே வந்த சிஷ்யைகள் அரசு அதிகாரிகள் பூட்டி சீல் வைக்கப்பட்ட இரு வேறு ஆசிரமங்களுக்கு மீண்டும் சென்று சீல் வைக்கப்பட்ட பூட்டினை உடைத்து உள்ளே வசிக்கத் தொடங்கிநிலையில் இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் ராமசுப்பிரமணியன் காவல்துறை உதவியுடன் மீண்டும் சிஷ்யைகள் தங்கி இருந்த இரு வேறு ஆசிரமங்களுக்கு சென்று அவர்களை வெளியேற்றினர். ராஜபாளையத்தில் இருந்து கோதை நாச்சியார்புரம் ஆசிரமம் சுமார் 10 கிலோ மீட்டரும் சேத்தூர் ஆசிரமம் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதி மற்றும் விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதிக்கு நடுவே அமைந்துள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பரமஹம்ச நித்தியானந்தரின் சிஷ்யைகள் காலை சுற்றிய பாம்பு போல் மீண்டும் மீண்டும் ஆசிரமத்தில் தங்குவது மட்டுமின்றி சிவலிங்கத்தை கட்டி பிடித்தவாறு தனது சொந்த நிலத்தில் இருந்து தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக அழுது நாடகம் ஆடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவுவதைக் கண்டு அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சிஷ்யைகள் மீது கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story

