மாணவர்களை விடுதியில் சேர்க்க இன்றே கடைசி நாள் ஜூன் 18

X
தமிழ்நாடு அரசால் திருவாரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபின பள்ளி மாணவ மாணவிகளுக்கு என திருவாரூர்,பேரளம்,முத்துப்பேட்டை என மாவட்டம் முழுவதும் 26 விடுதிகள் செயல்பட்டு வருகிறது இந்த விடுதிகளில் மாணவர்களை சேர்க்க ஜூன் 18ஆம் தேதியான இன்று கடைசி நாள்.விடுதிகளில் சேர்வதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோமீட்டாருக்கு மேல் இருக்க வேண்டும்.இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது தகுதியுடைய மாணவ மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளர்களிடமிருந்து அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
Next Story

