குமாரபாளையத்தில் ஜனவரி - 18ல் ஜல்லிக்கட்டு

குமாரபாளையத்தில் ஜனவரி - 18ல் ஜல்லிக்கட்டு
X
குமாரபாளையத்தில் ஜனவரி - 18ல் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பிரசித்திபெற்ற ஜல்லிக்கட்டுகளில் ஒன்றாகும். உலகளவில் இருக்கக்கூடிய தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவு, மத்திய மாநில அரசுகள் ஜல்லிக்கட்டின் மீது இருந்த தடையை நீக்கி ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த 2017ம் ஆண்டு வழிவகை செய்தது. ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியை தொடர்ந்து அதற்காக போராடிய மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு குமாரபாளையம் ஜல்லிக்கட்டு என்ற பெருமைக்குரியது. .இது தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் நடத்தப்பட்டு 10வது ஆண்டாக வருகிற ஜனவரி மாதம் 18ம் தேதி நடத்தப்படும் என்று நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான அனுமதி கடிதமும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கப்பட்டது.கூட்டத்தில் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார், விழாக்குழு தலைவர் பரணிதரன், செயலாளர் ராஜ்குமார், ரவி, வெங்கடேசன், புவனேஷ், சசிகுமார்,சீனிவாசன், விடியல் பிரகாஷ், சதீஷ், பிரேம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story