பரமத்தி வேலூர் 180-வது சந்தனக்கூடு விழா சகன்வலி தர்காவில் நடைபெற்றது.

பரமத்தி வேலூர் 180-வது சந்தனக்கூடு விழா சகன்வலி தர்காவில் நடைபெற்றது.
பரமத்திவேலூர் சகன்வலி தர்கா பள்ளிவாசலில் இறைநேசர் ஹஜ்ரத் சகன்ஷா அவுலியாவின் உரூஸ் என்கிற 180-வது சந்தனக்கூடு விழா சகன்வலி தர்காவில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தாவத் விருந்து மற்றும் தப்ரூக் பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு 10 மணியளவில் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் பரமத்திவேலூர் தர்கா பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் தர்கா பள்ளிவாசலை வந்தடைந்தது. காலை நடைபெற்ற மீலாது விழாவில், இஸ்லாமிய பெண்கள் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.முன்னதாக பள்ளிவாசலில் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அனைத்து மதத்தினரும், பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story