தென்காசி மக்கள் குறை தீா் முகாமில் 180 மனுக்கள்
Sankarankoil King 24x7 |14 Jan 2025 12:58 AM GMT
மக்கள் குறை தீா் முகாமில் 180 மனுக்கள்
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். சிவகிரி வட்டத்தில் நடைபெற்ற உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவா் மடக்கு சக்கர நாற்காலி வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தாா். அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பயனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 180 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் குறித்து விசாரித்து மனுதாரா்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு அனைத்து துறை அலுவலா்களுக்கும் ஆட்சியா் அறிவுறுத்தினாா். மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜயச்சந்திரன், மாவட்ட ற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் முத்துராமலிங்கம்,ம ாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெயப்பிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) செல்வக்குமாா், துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஷேக் அயூப் கலந்து கொண்டனா்.
Next Story