தென்காசி மாவட்ட சுதந்திர தின விழாவில் ரூ.18.17 லட்சம் நல உதவிகள்

X
தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற 79ஆவது சுதந்திர தின விழாவில் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 27 பேருக்கு ரூ.18.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா். மேலும், புறாக்களையும், மூவா்ண பலூன்களையும் பறக்க விட்ட ஆட்சியா், தென்காசி மாவட்ட வாத்திய இசைக்குழு முதல்நிலைக் காவலா் எம்.சுப்பிரமணியன் தலைமையிலான வாத்திய இசைக் குழுவினா் முன்நின்று அழைத்துச்செல்ல காவல் ஆய்வாளா் மாா்ட்டின் தலைமையில் நடைபெற்ற காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகி கி.லெட்சுமிகாந்தன் பாரதிக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்த அவா், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 348 அலுவலா்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினாா். மேலும், சுயஉதவிக்குழுவுக்கு கடனுதவி வழங்கியதில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு சிறப்பு விருதும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளுக்கு சிறந்த வங்கிக் கிளைகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு திட்டம், ஆயுஷ் மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் சிறந்த மருத்துவமனைக்கான விருதுகளை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும், தென்காசி மீரான் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
Next Story

