பி.எம் மித்ரா பார்க் ஜவுளி பூங்கா அமைக்க ரூ.1894 கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரை ஒப்புதல் வழங்கியுள்ளதை தொகுதி எம்.பி என்ற முறையில் நன்றி தெரிவித்த எம்பி

X
இ.குமாரலிங்கபுரத்தில் 1052 ஏக்கரில் பி.எம் மித்ரா பார்க் ஜவுளி பூங்கா அமைக்க ரூ.1894 கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரை ஒப்புதல் வழங்கியுள்ளதை தொகுதி எம்.பி என்ற முறையில் தாம் வரவேற்று நன்றி தெரிவிக்கிறேன்,பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி*
விருதுநகர் அருகே இ.குமாரலிங்கபுரத்தில் 1052 ஏக்கரில் பி.எம் மித்ரா பார்க் ஜவுளி பூங்கா அமைக்க ரூ.1894 கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரை ஒப்புதல் வழங்கியுள்ளதை தொகுதி எம்.பி என்ற முறையில் தாம் வரவேற்று நன்றி தெரிவிக்கிறேன்,பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாட இருப்பதாகவும் அதை முன்னிட்டு 9 வது ஆண்டாக விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி இறுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 1720 மாணவ,மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.விருதுநகர் அருகே இ.குமாரலிங்கபுரத்தில் 1052 ஏக்கரில் பி.எம் மித்ரா பார்க் ஜவுளி பூங்கா அமைக்க ரூ.1894 கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரை ஒப்புதல் வழங்கியுள்ளதை தொகுதி எம்.பி என்ற முறையில் தாம் வரவேற்று நன்றி தெரிவிப்பதாகவும்,பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலிசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மாநில அரசு துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தது வரவேற்கத் தக்கது என்றபோதும் வளர்ந்த மாநிலமான தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது வருத்தமளிப்பதாகவும்,அறிவியல் பூர்வமாக விசாரணையை நடத்த போலிசாருக்கு உரிய பயிற்சியை அளிக்க வேண்டும்,விசாரணை நடைமுறை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.தமிழக வெற்றிக் கழகத்தலைவர் நடிகர் விஜய் உயிரிழந்த அஜித் குடும்பத்தை பார்த்து ஆறுதல் சொன்ன விசயத்தை கட்சிகள் கடந்து அதை தாம் வரவேற்பதாகவும், பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணத்தை ஆலை உரிமையாளர் மற்றும் மாநில அரசு கொடுக்கும் போது பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் வழங்கும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை வழங்காது ஏன் என கேள்வியும் எழுப்பினார்.
Next Story

