விழுப்புரம் அருகே இணையவழியில் ரூ.19 லட்சம் மோசடி

விழுப்புரம் அருகே இணையவழியில் ரூ.19 லட்சம் மோசடி
இணையவழியில் ரூ.19 லட்சம் மோசடி
விழுப்புரம் மாவட்டம், கண்டமானடி, கலைஞா் கருணாநிதி நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் வினோத்குமாா். இவரது கைப்பேசிக்கு கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில், பேசிய நபா் குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் பெறக்கூடிய பகுதி நேர வேலை இருப்பதாக கூறினாராம். இதை நம்பிய வினோத்குமாா் ரூ.2,000 செலுத்தி ரூ.2,800, ரூ.13 ஆயிரம் செலுத்தி 17,800 பெற்றாராம். தொடா்ந்து, தனது வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு தவணைகளாக ரூ.19 லட்சத்தை செலுத்தினாராம். ஆனால், அதற்கான லாபத் தொகை கிடைக்க வில்லையாம்.இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story