கந்தர்வகோட்டை அருகே கதண்டு கடித்து 19 பேர் காயம்!

விபத்து செய்திகள்
கந்தர்வகோட்டை அருகே கதண்டு கடித்து நூறுநாள் திட்டப் பணியாளர்கள் 19 பேர் காயமடைந்தனர். கந்தர்வகோட்டை ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சியில் உள்ள மோளையன்குளத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் எனும் 100 நாள் வேலை உறுத் திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணியில் 122-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஆலமரத்து அடிப்பகுதியில் மதிய உணவு சாப்பிடுவதற்காக உட்கார்ந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆலமரத்திலிருந்த விஷக் கதண்டுகள் கூட்டமாக வந்து தொழிலாளர்களை கடித்தது. இதில், ரேகா (25), ராஜலட்சுமி (40), மகேஸ்வரி (40), சாந்தி (25), மகமாயி (85), நாச்சாரம்மாள் (70), செல்வி (40 ) உள்ளிட்ட 19 பேர் கதண்டு கடித்து காயமடைந்தனர். அவர்களை 108 அவசர ஊர்தி மூலம் கந்தர்வகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு மாலதி, வாசம்பாள், கோவிந்தம்மாள், ராஜேஸ்வரி உள்ளிட்ட 7 பேரை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story