கடமலைக்குண்டு பகுதியில் (டிச.19) மின் தடை ஏற்படும் என்று அறிவிப்பு

கடமலைக்குண்டு பகுதியில் (டிச.19) மின் தடை ஏற்படும் என்று அறிவிப்பு
கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிச.19) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது
கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிச.19) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது இது குறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திராநகா், வருஷநாடு, மயிலாடும்பாறை, பாலூத்து, அருகவெளி, குமணன்தொழு, தங்கமாள்புரம், சிறைப்பாறை, மந்திச்சுனை, வாலிப்பாறை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
Next Story