விருதுநகரில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து 19 பேர் காயம்*

X
விருதுநகர் அருகே சந்திரகிரிபுரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்தனர். விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் ஸ்ரீதர் கவுண்டம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.அந்த பேருந்து சந்திரகிரி புரத்தில் இருந்து பாவாலி சாலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 மாணவ, மாணவிகள் 8 பெண்கள் உட்பட 19 பேர் காயம் அடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

