திருச்சி இளைஞரிடம் வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.19 லட்சம் மோசடி செய்த நாமக்கல் தனியார் நிறுவனம் ! -பணத்தை மீட்டு தரும்படி எஸ்பி அலுவலகத்தில் இளைஞர் புகார் மனு!

திருச்சி இளைஞரிடம் வெளிநாட்டில்  வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.19 லட்சம் மோசடி செய்த நாமக்கல் தனியார் நிறுவனம் ! -பணத்தை மீட்டு தரும்படி எஸ்பி அலுவலகத்தில் இளைஞர் புகார் மனு!
X
சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.19 லட்சம் செலவாகும் என தங்கராசு கூறினார்.அங்கு சென்று வேலை செய்தால் மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கலாம் எனவும் கூறினார், மேலும் 40 நாட்களில் வெளிநாட்டிற்கு அனுப்பி வேலையில் அமர்த்தி விடுவதாகவும் உறுதி அளித்தார்.
வெளிநாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியர் வேலைவாங்கித் தருவதாக, நாமக்கல் தனியார் நிறுவனம் ரூ.18.92 லட்சம் மோசடி செய்துள்ளதாக, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளைஞர் புகார் அளித்துள்ளார்.திருச்சி மாவட்டம், பொன்நகர், கருமண்டபத்தைச் சேர்ந்த முகம்மதுசலீம் மகன் முகம்மதுபாசில்ஷா (22) என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது...பொறியியல் பட்டம் பெற்றுள்ள நான், நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவனம் வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாக தகவல் இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்தேன்.சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தங்கராசு என்பவரை 2024 ஜூலை 17–ஆம் தேதி நாமக்கல் முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் சந்தித்தேன். அப்போது, சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.19 லட்சம் செலவாகும் என தங்கராசு கூறினார்.அங்கு சென்று வேலை செய்தால் மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கலாம் எனவும் கூறி உள்ளனர். மேலும் 40 நாட்களில் வெளிநாட்டிற்கு அனுப்பி வேலையில் அமர்த்தி விடுவதாகவும் உறுதி அளித்து உள்ளனர். மேலும்,அங்கு சென்று பணியில் உள்ளோர் சம்பளம் விவரம் ரசீதுகளையும் அவர் காண்பித்தார். அதை நம்பி தவணை முறையில் ரூ.19 லட்சத்தை வழங்கினேன். ஒரு மாதத்திற்குள் வெளிநாடுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வந்தார். அதன்பிறகு, அவரை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் முடியவில்லை. நேரிலும், கைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னுடைய செல் நம்பரை அவர் பிளாக் லிஸ்டில் சேர்த்து விட்டார், ஒருமுறை
நாமக்கல் அலுவலகத்தில் சென்று பார்த்தபோது, அடிக்கடி தொந்தரவு செய்தால் உன்னுடைய பாஸ்போர்ட்டை முடக்கி விடுவேன் என மிரட்டினார். ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை நான் கொடுத்த ரூ.18.92 லட்சம் பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை.
உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் இருந்து காவல்துறை பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்,முகமது பாசில்ஷா தான் கொடுத்த பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என வலியுறுத்தியும்,சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அந்த நிறுவனத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story