ஆண்டிமடம் வட்டத்தில் மார்ச் 19, 20}இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

X
அரியலூர், மார்ச் 14- அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வருவாய் வட்டத்தில் மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது: ஆண்டிமடம் வருவாய் வட்டத்தில் 19.3.2025 அன்று காலை 9 மணி முதல் 20.3.2025 காலை 9 மணி வரை உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு துறைச் சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்கள் அரசின் அனைத்து நலத்திட்டங்கள்,ú சவைகள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இதன்படி 18.3.2025 வரை பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் என்று குறிப்பிட்டு மனுக்களை ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கலாம். 19.3.2025 அன்று மாலை 4.30 மணியளவில் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்வின் போதும் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளிக்கலாம். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.
Next Story

