போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் நலன் கருதி 19 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட பயிற்சி மையத்தை திறந்து வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்

X
அரியலூர், ஏப்..20- அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் உள்ள பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் மத்திய மாநில அரசு பணிகளுக்கான நுழைவு தேர்விற்கு தயாராகும் வகையில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் மைய நூலகத்திலேயே பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு கல்வியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கும் வகையில் மாவட்ட மைய நூலகத்திலேயே இரண்டாவது மாடியில் 19 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் புதிய பயிற்சி மையக் கட்டிடம் கட்டப்பட்டது இக்கட்டிடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று திறந்து வைத்தார் அப்போது மாவட்ட மைய நூலகத்தில் பயிற்சி பெற்று அரசு பணிகளுக்கு தேர்வாகியுள்ள மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் மேலும் மைய நூலகத்தில் புரவலர்களுக்கான தொகையினை போக்குவரத்து துறை அமைச்சரிடம் வழங்கி நூலகத்தில் புரவலர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர் அப்பொழுது இப்பயிற்சி மையத்தை போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு அரசு பணிகளுக்கு தேர்வாகி மக்கள் பணியாற்றிட முன்வர வேண்டும் எனவும் அமைச்சர் சிவசங்கர் கேட்டுக்கொண்டார் முன்னதாக மாவட்ட மைய நூலகத்திற்கு 22.30 லட்சம் மதிப்பில் சுற்றுச்சூழல் கட்டும் பணியையும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அரியலூர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் நூலகத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Next Story

