அரியலூர் அனிதா அரங்கில்,19 கல்லூரியில் பயிலும் 722 மாணவிகளுக்கு,புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்திற்கான பற்று அட்டை

X
அரியலூர், டிச.30- தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம்) புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தினை,காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்ததைத் தொடர்ந்து, அரியலூர் அனிதா அரங்கில்,19 கல்லூரியில் பயிலும் 722 மாணவிகளுக்கு,புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்திற்கான பற்று அட்டையினை (ATM card),மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் ,அரியலூர் எம் எல் ஏ கு.சின்னப்பா ஆகியோர் முன்னிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.இதில் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் த.அனுராபூ நடராஜன்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தன்,மாவட்ட மகளிர் அதிகார மைய அலுவலர் இரா.மணிவண்ணன்,திருமானூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி அசோக சக்கரவர்த்தி,அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன்,கல்லூரி முதல்வர்கள், அரசு அலுவலர்கள்,வங்கி மேலாளர்கள், ஆசிரியர்கள்,மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story

