பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் மக்களுடன் முதல்வர் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.1.90 கோடி கடன் உதவி வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதியில், பாளத்தளி ஊராட்சி மன்ற அலுவலகம், பூவாளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, களத்தூர் கிழக்கு அய்யனார் கோயில் வளாகம், ஆவணம் - பெரியநாயகிபுரம் சமுதாயக்கூடம், அம்மையாண்டி ஊராட்சி ஏனாதிகரம்பை அரசு உயர்நிலைப்பள்ளி, ஊமத்தநாடு ஊராட்சி உடையநாடு டிஜிஎல் திருமண மஹால் ஆகிய 6 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இம்முகாம்களில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற நா.அசோக்குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், 48 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 720 பயனாளிகளுக்கு ரூ.1.கோடியே 90 லட்சம் மதிப்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகளை வழங்கியும் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், திமுக மாவட்டப் பொறுப்பாளர் த.பழனிவேல், ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், கோ.இளங்கோவன், வை.ரவிச்சந்திரன், மு.கி.முத்துமாணிக்கம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரன், தாட்கோ மாவட்ட மேலாளர், வட்டாட்சியர்கள் தர்மேந்திரா (பட்டுக்கோட்டை), சுப்பிரமணியன் (பேராவூரணி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மா.சாமிநாதன், ஜி.செல்வேந்திரன், நாகேந்திரன், மனோகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



