கரூர் மாவட்டத்தில் 190.60மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 190.60மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கரூரில் 13.60 மில்லி மீட்டர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அரவக்குறிச்சி 54 மில்லி மீட்டர் அணைப்பாளயத்தில் 22 மில்லி மீட்டர் க.பரமத்தியில் 31.60 மில்லி மீட்டர் குளித்தலையில் 5 மில்லி மீட்டர் கிருஷ்ணராயபுரத்தில் 19.20 மில்லி மீட்டர் மாயனூரில் 17 மில்லி மீட்டர் பஞ்சபட்டியில் 5.20 மில்லி மீட்டர் கடவூரில் 11 மில்லிமீட்டர் பாலவிடுதியில் 12 மில்லி மீட்டர் என மொத்தம் 190.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 15.88 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story





