உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய்19.08 கோடி வங்கி கடன் இணைப்பினை அரசு தலைமை கொறடா கா ராமச்சந்திரன் வழங்கினார்........
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய்19.08 கோடி வங்கி கடன் இணைப்பினை அரசு தலைமை கொறடா கா ராமச்சந்திரன் வழங்கினார்........ தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கமூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆன மாபெரும் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அரசு தலைமை கொறடா தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பினை அரசு தலைமை கொறடா கா ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். மேலும் நீலகிரி மாவட்டத்தில் இருந்து சுமார் 163 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 19.08 கோடி கடன் இணைப்பினை வழங்கினார் . முன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு கொறடா முன்னிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகளிர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
Next Story



