சூலூரில் ₹19.40 லட்சம் மதிப்பில் வடிகால் பணி தொடக்கம் !

X
சூலூர் சட்டமன்றத் தொகுதி, பள்ளபாளையம் பேரூராட்சி சிந்தாமணிபுதூர் தெற்கு (4-வது வார்டு) மற்றும் 8-வது வார்டுகளில், புதிய வடிகால் அமைக்கும் பணிகள் ₹19.40 லட்சம் செலவில் தொடங்கின. பணிகளை எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மழைநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வாக இத்திட்டம் அமையும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் பேரூராட்சி அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

