கரூர் மாவட்டத்தில் 195.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 195.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 195.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு. அரபிக் கடலில் புயல் வங்க கடலில் சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மலை தொடரும் என சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. கடந்த ஒரு வார காலமாகவே கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்துள்ளது. பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவித்துள்ளது அதன் அடிப்படையில் கரூர் 6.00 மில்லி மீட்டர், அரவக்குறிச்சி 12.00 மில்லி மீட்டர், அனைபாளையம் 6.40 மில்லி மீட்டர், க.பரமத்தி 2.60 மில்லி மீட்டர், குளித்தலையில் 6.4 மில்லி மீட்டர்,தோகை மலையில் 20.00 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 10.50 மில்லி மீட்டர், மாயனூரில் 36.60 மில்லி மீட்டர் மாவட்டத்தில் அதிகப்படியாக பஞ்சபட்டியில் 39.20 மில்லி மீட்டர், கடவூரில் 18.00 மில்லி மீட்டர், பாலவிடுதியில் 20.00 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 18.00 மில்லி மீட்டர் என மொத்தம் 195.70 மில்லி மீட்டர் மலையளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 16.31 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்
Next Story