குமரியில் 197 கஞ்சா வியாபாரிகள் கைது

X
குமரி மாவட்ட காவல்துறையில் போக்சோ சட்ட விழிப்புணர்வு மற்றும் பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அறிமுகப்படுத்தியுள்ள நிமிர் திட்டத்தின் கீழ், ரோந்து பணியில் உள்ள போலீசார் விழிப்புடன் பணி யாற்றி வருகிறார்கள். இதுவரை 3 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்கும் வகையிலான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். பெற்றோரில் ஒருவரை இழந்து கவனிக்கப்பட வேண்டிய சுமார் 2500 குழந்தைகள் காவல்துறையின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மாவட்டத்தில் கஞ்சாவை ஒழிக்க கைது நடவடிக்கை தீவிரபடுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வருடத்தில் இதுவரை 197 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 3 மடங்கு வரை அதிகமாகும் என குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Next Story

