முசிறி அருகே 1976 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா

X
திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் கடந்த 125 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவி பெறும் ஜமீன்தார் பள்ளி உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வந்தது, தரம் உயர்த்தப்பட்டு தற்பொழுது மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது, இப்பள்ளியில் கடந்த 1976 ஆம் ஆண்டு எஸ் எஸ் எல் சி படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் தனது குடும்பம் மற்றும் பேரன் பேத்திகளுடன் கலந்து கொண்டனர், பாராட்டு விழா நிகழ்ச்சியில் 1976 ஆம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்திய சுமார் 80 வயது முதல் 90 வயதுக்குள் உடைய ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டு முன்னாள் மாணவ, மாணவிகளுடன் பல்வேறு கலந்துரையாடல் செய்து மலரும் நினைவுகளை பகிர்ந்ததில் சிலர் மனமுருகி வாழ்த்துக்களை தெரிவித்தனர், 49 ஆண்டுகளுக்குப் பிறகு படித்த மாணவர்கள் ஒன்றிணைந்து அனைவரும் பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டது ஒருவருக்கொருவர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது, வகுப்பறையில் அமர்ந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் நாகரத்தினம் அன்று பாடம் நடத்தியது போல் குச்சை வைத்துக் கண்டு பாடம் எடுத்தது முன்னாள் மாணவ, மாணவிகளிடையே பெரும் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவிக்கின்றனர், இன்று 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவியர்களும், அன்று பாடம் நடத்திய ஆசிரியர்கள் 11 பேர் 80 முதல் 90 வயதில் கலந்துகொண்டு தங்களுக்கு ஆசி வழங்கியது எங்களுக்கு மறக்க முடியாத நாளாகும் என தெரிவித்து அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர், 50க்கும் மேற்பட்டோர் 49 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றும், சிலர் பல்வேறு தொழில் துறையில் முன்னேறியும், ஒன்றிணைந்தது நமது குடும்பத்துடன் மகள் மற்றும் மகன்கள் பேரக் குழந்தைகளுடன் வந்தது அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்ததாக தெரிவிக்கின்றனர், இதுபோல் நாள் கிடைக்காது என தெரிவித்து கலைந்து சென்றனர், இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக முன்னாள் மாணவ, மாணவியர்கள் ஒன்றிணைந்து இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ நாராயணா பிரம்மேந்திர மடாலய செயலாளர் கதிர்வேல் தலைமையில் மீனாகுமாரி, லட்சுமி, வடிவேல், தியாகராஜன், சிவராஜ் ஆகியோர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து இருந்தனர்,
Next Story

