மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு 2 பேர் காயம் : கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு 2 பேர் காயம் : கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள்

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு 2 பேர் காயம் : கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இருந்து பெட்டமுகிலாளம் மலை கிராமத்திற்கு 36 ஆம் நம்பர் அரசு நகர பேருந்து சென்றுள்ளது. அப்போது தல்சூர் என்ற கிராமத்திற்குள் அரசு பேருந்து சென்றபோது பேருந்தில் சிக்கி சரவணன் என்பவர் வீட்டிற்கு சென்ற மின்சார ஒயர் துண்டானது.

சாலையில் கிடந்த துண்டான மின்சார ஒயரை ரத்தினம்மா (48) என்பவர் மிதித்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதைப்பார்த்த முரளி (23) மற்றும் அவரது தம்பி லோகநாதன் (19) ஆகியோர் ரத்தினமாவை காப்பாற்ற முயன்றுள்ளனர் அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கி உள்ளது. படுகாயம் அடைந்த மூன்று பேரையும் கிராம மக்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

செல்லும் வழியில் ரத்தினம்மா பரிதாபமாக உயிரிழந்தார். முரளி மற்றும் லோகநாதன் ஆகிய இருவருக்கும் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்தும் உயிரிழந்த ரத்தினம்மா குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தல்சூர் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தால் அய்யூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை தாசில்தார், தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் மற்றும் மின்சார வாரியத் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உயிரிழந்த ரத்தினம்மா குடும்பத்தில் ஒருவருக்கு மின்வாரியத்தில் தற்காலிக பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது இதனை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story