மாவட்டத்தைச் சேர்ந்த 2பேருக்கு முதல்வர் வாழ்த்து!

மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருதினைப் பெற்றுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 
மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருதினைப் பெற்றுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.  வீர தீரச் செயலுக்கான மத்திய அரசின் 2023ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா விருதினைப் பெற்றிருக்கும் தூத்துக்குடி மாவட்டம் - விளாத்திக்குளத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரும், தூத்துக்குடியை சேர்ந்த மரியமைக்கேல் என்பவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அவர்கள் மென்மேலும் பல சாதனைகளை புரிய சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
Next Story