கிணற்றில் தவறி விழுந்த பிளஸ் - 2 மாணவர் உயிருடன் மீட்பு

கிணறு
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கேட்டை சேர்ந்தவர் குமாரவேலு. இவரது மகன் கார்த்திக்கேயன் (வயது 17). பிளஸ்- 2 படித்து வரும் இவர் நேற்று தனது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததில் காயமடைந்து தண்ணீரில் தத்த ளித்தவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீய ணைப்பு உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையி லான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கிணற்றில் இறங்கி கட்டிலில் கயிறு கட்டி கார்த்திக்கேயனை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தசம்பவம் தொடர்பாகபாடாலூர்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story