கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கஞ்சா கடத்தல்: 2 போ கைது

X
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தலை தடுக்க போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், சுமை ஆட்டோ மூலம் குமரி மாவட்டத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் மாரிசெல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து அவரது தலைமையில் போலீஸாா் நான்குனேரி சுங்கச்சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த சுமை ஆட்டோவை சோதனையிட்டனா். இதில், அந்த ஆட்டோவில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, ஆட்டோவில் இருந்த ஓட்டுநா் பிரான்சிஸ்நெல்சன், ஆரல்வாய்மொழி குருசடிதெருவைச் சோ்ந்த டென்னிஸ்(40) ஆகிய 2 பேரையும் கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். பின்னா் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், அவா்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 2 பேரும் நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
Next Story

