ஏ.கே.டி., கல்லுாரியில் 2 நாள் பயிலரங்கம்
Thirukoilure King 24x7 |28 Aug 2024 4:40 AM GMT
பயிலரங்கம்
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பாலிடெக்னிக் கல்லுாரி ரெப்ரிஜிரேஷன் அண்ட் ஏர் கண்டிஷனிங் துறை சார்பில், இரண்டு நாள் பயிற்சி பயிலரங்கம் நடந்தது.பயிற்சியை ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் கபிலர் வாழ்த்துரை வழங்கினார். இதில் யுனிக் நிறுவனம் சார்பில் பயிற்சியாளர்கள் தீபக், இம்ரான் ெஷரிப் ஆகியோர் பங்கேற்று டிசைன் அண்ட் ட்ராப்டிங் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிலரங்கத்தில் ஏ.கே.டி., பாலிடெக்னிக் கல்லுாரி மட்டுமின்றி, திருவண்ணாமலை, கடலுார், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் 568 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களில் உள்ள ஏர் கண்டிஷனிங் சிஸ்டங்களை கொண்டு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் செய்திருந்தார்.
Next Story