விருத்தாசலத்தில் ரூபாய் 2 கோடி மதிப்பில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை அமைக்கும் பணி
Virudhachalam King 24x7 |28 Aug 2024 12:20 PM GMT
பூமி பூஜையுடன் தொடங்கியது
விருத்தாசலத்தில உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு லாய்க்கற்ற நிலையில் இருந்து வந்தது. இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று என்எல்சி சமூக மேம்பாட்டு நிதி ரூபாய் 2 கோடி மதிப்பில் 1600 மீட்டர் அளவிற்கு சாலை சீரமைக்கும் பணிக்கு இன்று பூமி பூஜை நடந்தது. ஒன்றிய குழு தலைவர் மலர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராஹிம், மோகனாம்பாள், உதவி பொறியாளர்கள் கார்த்திக், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒன்றிய செயலாளரும் சத்தியவாடி ஊராட்சி மன்ற தலைவருமான வேல்முருகன் பணியை தொடங்கி வைத்தார். இதில் திமுக மாவட்ட விவசாய அணி தலைவர் வெங்கடாஜலபதி, ஒப்பந்ததாரர் ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story