குளித்தலை தந்தை பெரியார் காவிரி பாலத்தில் 2 சரக்கு லாரிகள் மோதிய விபத்து
கரூர் மாவட்டம் குளித்தலை தந்தை பெரியார் காவிரி பாலத்தில் இரண்டு சரக்கு லாரிகள் மோதி விபத்தானது. கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சிவநாராயணன் அரியலூரில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு கோழிக்கோடு நோக்கி வந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த லாரி ஓட்டுநர் சோலை பாண்டியன். விராலிமலையில் இருந்து பசைப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒசூர் நோக்கி சென்றுள்ளார். இரண்டு வாகனங்களும் குளித்தலை - முசிறியை இணைக்கும் தந்தை பெரியார் பாலத்தில் சிமெண்ட் லாரி எதிரே வந்த மற்றொரு லாரியின் நடுப்பகுதியில் மோதி விபத்தானது. சிமெண்ட் லாரியின் முகப்பு முற்றிலும் சேதமானது. அதில் வந்த லாரி ஓட்டுனர் சிவநாராயணன் கை மற்றும் காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மற்றொரு லாரியில் நடுப்பகுதியில் ஆக்ச்வீல் கட்டாகி டயர் நழுவியது. இதில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்போது கால்நடைகளுக்கு புற்களை ஏற்றிக் கொண்டு வந்த பைக் லாரி பின்பக்க சக்கரத்தில் சிக்கியது. இதில் கல்லுப்பட்டியை சேர்ந்த சின்னையன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் 3 கிலோமீட்டர் தொலைவுள்ள காவிரி பாலத்தில் இருபுறங்களிலிலும் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story