கரூரில் 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.

கரூரில் 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.
கரூரில் 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம். அங்கன்வாடி பணியாளர்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 2- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் குறு அங்கன்வாடியில் 127 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 5 வருடங்கள் பணியாற்றிய அவர்களுக்கு அங்கன்வாடி மையத்திற்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 10ம் வகுப்பு படித்து, குறு அங்கன்வாடியில் 10 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியவர்களுக்கு அங்கன்வாடியில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது அரசாணையில் உள்ளது. ஆனால் இந்த 2 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தாததால் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் குறு அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் நுழைவு வாயில் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கி இப்போராட்டம் இரவாகியும் தொடர்ந்து நடைபெற்றது. தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடுவது இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் தெரிவித்தனர்.
Next Story