தாராபுரம் அருகே டாஸ்மாக் கடை அருகே மது அருந்திவிட்டு நின்று கொண்டிருந்தவரிடம் தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Dharapuram King 24x7 |17 Sep 2024 11:36 AM GMT
தாராபுரம் அருகே டாஸ்மாக் கடை அருகே மது அருந்திவிட்டு நின்று கொண்டிருந்தவரிடம் தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம் அருகே டாஸ்மாக் கடை அருகே மது அருந்திவிட்டு நின்று கொண்டிருந்தவரிடம் தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தாராபுரம் அடுத்துள்ள காளிபாளையம் காந்திஜி நகர் பகுதியைச் சேர்ந்த அங்குசாமி என்பவரது மகன் ஜெய் கணேஷ்( வயது 45) .சம்பவத்தன்று ரெட்டாரவலசு டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது சீராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மகன் கணேஷ் (வயது 29) அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் குரு பிரசாத்(வயது29) ஆகிய இருவரும் வாய் தகராறில் ஈடுபட்டனர்.தகராறு இருவரும் சேர்ந்து ஜெய் கணேசை தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் காலில் காயமடைந்து தாராபுரம் அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்றார் .ஜெய்கணேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கணேஷ் ,குருபிசாத் ஆகிய இரண்டு பேரை தாராபுரம் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர்.
Next Story