பெண் ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஆள்மாறாட்டம் : 2பேர் கைது!
Thoothukudi King 24x7 |19 Sep 2024 2:46 AM GMT
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஆள்மாறாட்டம் செய்த பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக வந்தவர் என 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்களின் புகார்கள் குறித்த குறைதீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும் அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு டிப் டாப்பாக வந்த ஒரு பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தான் உத்திரபிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் ஆக கல்வித்துறையின் செயலாளராக பணிபுரிவதாக கூறி அறிமுகம் செய்ததுடன் தன்னிடம் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு நபர் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார் அந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார் இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியா என்பது குறித்து விசாரணை செய்ய மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார் இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் போலி ஐஏஎஸ் என தெரிய வந்தது மேலும் அவர் நெல்லை மாவட்டம் தாளையூத்து பகுதியை சேர்ந்த மங்கையர்க்கரசி என்பதும் அவருடன் வந்த மற்றொரு நபர் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த ரூபிநாத் என்பதும் தெரியவந்தது இதைத்தொடர்ந்து போலியாக ஐஏஎஸ் என ஏமாற்றிய மங்கையர்கரசி மற்றும் அவருக்கு உதவியாக வந்த ரூபிநாத் ஆகியோரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவு பிறப்பித்தார் இதைத் தொடர்ந்து மங்கையர்க்கரசி மற்றும் ரூபிநாத் ஆகியோரை சிப்காட் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடமே போலியாக ஐஏஎஸ் எனக்கூறி பெண் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story