இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்டோபர் 2 அன்று கருப்புக்கொடி ஏந்தி கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்டோபர் 2 அன்று கருப்புக்கொடி ஏந்தி கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டிபன் வருகின்ற அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். அதன்படி அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பு கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், ஒறையூர் கிராம பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். 2022, 2023, 2024-ஆம் ஆண்டுகளில் பொறுப்பில் இருந்த வட்டாட்சியர்கள் எழுத்து பூர்வமாக மேற்கண்ட கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என்ற உறுதி அளித்தனர். 2023-ஆம் ஆண்டு மற்றும் 2024-ஆம் ஆண்டு வட்டாட்சியர்கள் ஒப்புக்கொண்டு புல எண். 247/4ல் 0.75.0 ஏர்ஸ் தோப்பு புறம்போக்கை நத்தமாக வகைமாற்றம் செய்ய முன்மொழிவை கடலூர் கோட்டாட்சியர் மற்றும் DRO-க்கு 23.08.2024-க்குள் அனுப்பி வைக்கப்படும் என்று ஒப்புக்கொண்ட பிறகு, ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தோப்பு புறம்போக்கு இடத்தில், தனிநபர் ஒருவர் தடுத்து வருகிறார். அரசுக்கு சொந்தமான தோப்பு புறம்போக்கை தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடி பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என்ற உள் நோக்கத்தோடு நீதிமன்றத்தில் ஒரு பொய்யான வழக்குறை தாக்கல் செய்துள்ளார். இதற்கெல்லாம் பண்ருட்டி வட்டாட்சியர் நிர்வாகம் முழுபொறுப்பேற்க வேண்டும். மேற்கண்ட ஏழை எளிய மக்களுக்கு கிட்டத்தட்ட 75 குடும்பத்தில் 50-க்கும் மேற்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை சம்மந்தமாக வட்டாட்சியர் நிர்வாக மெத்தனபோக்கை கண்டித்து அக்டோபர்-2 2024 அன்று கருப்புக்கொடி ஏந்தி, கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
Next Story