அரிசி கடை உரிமையாளரை தாக்கிய 2பேர் கைது

அரிசி கடை உரிமையாளரை தாக்கிய 2பேர் கைது
தூத்துக்குடியில், அரிசி வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல், கடை உரிமையாளரை தாக்கிய 2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில், அரிசி வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல், கடை உரிமையாளரை தாக்கிய 2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் ஐயப்பன் (37) இவர் அப்பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் தூத்துக்குடி பர்மா காலனியைச் சேர்ந்த முத்து முகமது மகன் சீனி முகம்மது என்பவர் 10 கிலோ அரிசி வாங்கினாராம் ஆனால் அதற்கு பணம் கொடுக்க வில்லையாம். பணத்தை கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சீனி முகம்மது, மற்றும் அவரது நண்பர்கள் அண்ணா நகரை சேர்ந்த ராஜா சப்பானி முத்து மகன் கண்ணபிரான் (34), கீழே கூட்டுடன் காடு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சந்தனராஜ் (41) ஆகிய 3 பேருடன் சேர்ந்து அரிசி கடைக்கு சென்று ஐயப்பனை சரமாரியாக தாக்கினார்களாம். இது குறித்து ஐயப்பன் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப் பதிந்து, கண்ணபிரான் மற்றும் சந்தனராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சீனி முகம்மதுவை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story