கைதி தற்கொலை வழக்கில் 2 போலீசார் சஸ்பெண்ட்

அரசு செய்திகள்
புதுக்கோட்டை:தஞ்சை மாவட்டம் திருவையாறு நடுக்காவேரி அருகே உள்ள மேலத்தெருவை சேர்ந் தவர் ரமேஷ் (46). இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண் டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கைதி அனும திக்கப்பட்டிருந்த வார்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் நவநீதகிருஷ்ணன், வல் லரசு ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவிட்டார்.
Next Story