முள் மரம் வெட்டியதில் தகராறு, 2 பேர் மீது வழக்கு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்லடை ஊராட்சி காக்கி தோப்பனைக்கன் பட்டியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (23). இவர் தனது தோட்டத்தில் நேற்று இருந்த போது அங்கு வந்த பாதிரிப்பட்டியை சேர்ந்த பழனி, ரமேஷ் ஆகிய இருவரும் சீத்த முள்ளை வெட்டிக்கொண்டு இருந்துள்ளனர். இதை கேட்ட நந்தகுமாரை திட்டி கையால் அடித்து கீழே தள்ளியுள்ளனர். காயம் பட்ட நந்தகுமார் தோகைமலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். புகாரின் பேரில் 2 பேர் மீது தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.
Next Story