தொடரும் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க 2வது நாளாக தடை வனத்துறை அறிவிப்பு.
Periyakulam King 24x7 |4 Nov 2024 5:52 AM GMT
தடை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில் பெய்து வரும் கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளில் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், அருவி பகுதிக்கு சென்று பார்க்கவும் 2வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மேலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அருவியில் நீர் வரத்து குறைந்து சீராகும் வரை குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story