காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் திருமண முயற்சி
Nagercoil King 24x7 |5 Nov 2024 4:31 PM GMT
இரணியல் அருகே
குமரி மாவட்டம் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு இன்று (5-ம் தேதி) காலை திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் வந்திருந்தார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான தனது 35வது மனைவியை குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் திருமண செய்யப்போவதாக செல்போன் மூலம் தகவல் வந்ததாக கூறினார். போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர் அப்போது அவர் நான் யாரையும் அழைத்து வரவில்லை என்று கூறினார். போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு நடத்திய விசாரணையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தெரிய வந்தது. எசம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரையும் அந்தப் பெண்ணையும் போலீஸ நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் பெண்ணின் இரண்டாவது கணவர் என்பது தெரிய வந்தது. அவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை அத்ததால், குமரி மாவட்ட வாலிபருடன் மூன்றாவது திருமணம் செய்ய ஆசைப்பட்டு வந்ததாக அந்த பெண் கூறினார். ஆனால் அந்த முறைப்படி அந்த இரண்டாவது கணவரை விவாகரத்து செய்யவில்லை என்பது தெரிய வந்தது. எனவே இரண்டாவது கணவர் மற்றும் உறவுகளுடன் செல்லுமாறு போலீசார் அறிவுரை கூறினார்கள். ஆனால் அதை ஏற்க மறுத்த பெண் இரணியல் பகுதியை சேர்ந்த காதலனுடன் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார்.
Next Story