கந்தம்பாளையம் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து: சுமார் 2 ஆயிரம் கோழிகள் எரிந்து நாசம்.

X
Paramathi Velur King 24x7 |7 Dec 2024 5:59 PM ISTகந்தம்பாளையம் அருகே கோழி பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டதில் சுமார் 2 ஆயிரம் கோழிகள் தீயில் எறிந்து நாசமானது.
பரமத்திவேலூர், டிச.7 நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன்(58). இவர் ஊஞ்சல் கொடை என்னும் இடத்தில் தனக்கு சொந்தமான விவசாயத் தோட்டத்தில் சிறியதாக நாட்டு கோளிப்பண்ணை வைத்து அதில் சுமார் 2 ஆயிரம் கோழிகளை வைத்து வளர்த்து வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவர் வளர்த்து வந்த ஆட்டிற்கு வைப்பதற்காக விறகு அடுப்பில் கூல் காச்சி உள்ளார். பின்பு அடுப்பில் இருந்த நெருப்பை அணைக்காமல் மறந்தவாறு அங்கிருந்து கிளம்பி பேங்க் செல்வதற்காக கந்தம்பாளையம் சென்றுள்ளார். மீண்டும் தோட்டத்திற்கு வந்தபோது அணைக்கப்படாமல் இருந்த தீ அருகிலிருந்த கீற்று மற்றும் தகரம் மூலம் அமைக்கப்பட்ட கோழிப்பண்ணையில் பிடித்து எரிந்து கொண்டிருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த முருகேசன் உடனடியாக திருச்செங்கோட்டில் உள்ள தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கோழிப்பண்ணையில் எரிந்து கொண்டிருந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் முற்றிலுமாக அணைத்தனர். இருந்தும் பண்ணையில் இருந்த சுமார் 2 ஆயிரம் கோழிகள் தீயில் எறிந்து இறந்து விட்டது. சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
