இளைஞர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது!

இளைஞர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது!
X
தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் இளைஞர் கொலை வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளி, பொன்நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் வெள்ளைக்கண்ணு (24). கட்டடத் தொழிலாளியான இவரை வீட்டருகே கடந்த 3ஆம் தேதி மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து, 5 பேரைக் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இக்கொலையில் தொடர்புடைய புதுக்கோட்டை பெரியநாயகிபுரத்தைச் சேர்ந்த பெரியநாயகம் மகன் செல்வக்குமார் (23), நாசரேத் வெள்ளமடத்தைச் சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார் (28) ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Next Story