நாகையில் 2-வது நாளாக கனமழை

848.60 மி. மீ. மழை அளவு பதிவு
வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மிதமாகவும் தூறலாகவும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரையிலும் கன மழை பெய்தது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையின் காரணமாக சாலையின் இரு புறங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்). நாகை 88.20, திருப்பூண்டி 96.90, வேளாங்கண்ணி 130.60, திருக்குவளை 104.20, தலைஞாயிறு 146.40, வேதாரண்யம் 99.90, கோடியக்கரை 182.40. ஆக மொத்தம் மாவட்டத்தில் 848.60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 121.23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கனமழை மேலும் தொடர்ந்தால் நடப்பு சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Next Story