குமரியில் கோழி கழிவுகள் ஏற்றி வந்த 2 பேர் கைது
Nagercoil King 24x7 |22 Dec 2024 12:18 PM GMT
களியக்காவிளை
கேரளா மாநிலத்தில் இருந்து தினம் தினம் கோழி இறச்சி கழிவுகள், மாட்டு கொழுப்பு, எலும்புகள், மாட்டு இறச்சி, மருத்துவ கழிவு பொருட்களை டெம்போக்களில் ஏற்றிக் கொண்டு தமிழக பகுதிகளில் ரோட்டோரம் கொட்டி விடுகின்றனர். இவ்வாறு கொண்டு வரும் கழிவு பொருட்களை கட்டுப்படுத்த குமரி மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் குமரி மாவட்டம் களியக்காவிளை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் களியக்காவிளையில் இன்று (22-ம் தேதி) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனதில் கோழி கழிவுகள் இருந்தது தெரிய வந்தது. இதனை கொண்டு வந்த திருவனந்தபுரம் பகுதியை சார்ந்த முகமதுவை கைத செய்து குழித்துறை சிறையில் அடைத்தனர். அவர் ஒட்டி வந்த டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது. களியக்காவிளை சோதனை சாவடியில் சப் - இன்ஸ்பெக்டர் ஆன்றோ கிவின் பணியில் இருந்து வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது வேகமாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டார். அந்த டெபோவில் மாட்டு இறச்சி, கொழுப்பு, எலும்புகள், மாட்டு இறச்சி கழிவுப் பொருட்கள் இருந்தது. டெபோவை பறிமுதல் செய்தார். இதனை கொண்டு வந்த தென்காசி ராஜா நகர் பகுதியை சார்ந்த சுப்பையா (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story