ஆந்திரத்துக்கு ரயில் கடத்த இருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Tiruvallur King 24x7 |22 Dec 2024 2:35 PM GMT
ஆந்திரத்துக்கு ரயில் கடத்த இருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா், அனுப்பம்பட்டு, பொன்னேரி பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி மின் ரயிலில் கடத்தப்படுவதாக பொன்னேரி வட்ட வழங்க அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடா்ந்து உணவு பொருள் வழங்கல் துறை பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலா் ஜெயகா் பிரபு மீஞ்சூா், அனுப்பம்பட்டு, பொன்னேரி ரயில் நிலையங்களில் சோதனை நடத்தினாா். அப்போது ஆந்திர மாநிலம் சூலூா்பேட்டை சென்ற மின்ரயில்களில் சிறு சிறு மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை கண்டுபிடித்தாா். இதனைத் தொடா்ந்து 1,890 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அவற்றை தச்சூா் கூட்டு சாலையில் உள்ள தமிழ்நாடு நுகா் பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனா்.
Next Story