சேலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
Salem King 24x7 |23 Dec 2024 1:24 AM GMT
போலீசார் நடவடிக்கை
சேலம் அன்னதானப்பட்டி போலீசார் நெந்திமேடு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரியபெருமாள் கோவில் கரடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கே.பி.கரட்டை சேர்ந்த விஜய் (வயது 26), தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த செல்வராஜ் (23) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story