சேலம் சீலநாயக்கன்பட்டியில் கழுதைப்பால் விற்க வந்த பெண்ணிடம் 2 பவுன் நகை திருட்டு
Salem King 24x7 |25 Dec 2024 1:58 AM GMT
போலீசார் விசாரணை
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி தையல்நாயகி (வயது 52). இருவரும் ஊர் ஊராகச்சென்று கழுதை பால் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் சேலத்திற்கு விற்பனைக்காக வந்திருந்தனர். தொடர்ந்து, அன்றைய விற்பனையை முடித்துக்கொண்டு சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மின்சார வாரிய அலுவலகம் முன்புறம் இருவரும் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை இருவரும் அசந்து தூங்கி கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்மநபர்கள் தையல் நாயகி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story