பர்கூர் அருகே மது போதையில் தகராறு- 2 பேர் கைது.
Krishnagiri King 24x7 |25 Dec 2024 2:30 AM GMT
பர்கூர் அருகே மது போதையில் தகராறு- 2 பேர் கைது.
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அடுத்துள்ள எமக்கல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் திருவேங்கடம் (30) ஜெகதேவி ரோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (30) டிரைவர்களான இவர்கள் 2போரும் சின்ன பர்கூர் அருகே உள்ள மேம்பாலம் அருகில் சர்வீஸ் சாலையில் மது குடித்துள்ளனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் திருவேங்கடத்தை. கார்த்திக் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த திருவேங்கடம் பர்கூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக்கை பர்கூர் போலீசார் கைது செய்தனர். அதே போல கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் திருவேங்கடத்தை போலீசார் கைது செய்தனர்.
Next Story