குளிக்கச் சென்று எதிர்பாராத விதமாக உயிரிழந்த 2 சிறார்களின் குடும்பத்திற்கு நிவாரணம்
Sivagangai King 24x7 |26 Dec 2024 10:56 AM GMT
சிவகங்கை மாவட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திருகோஷ்டியூர் கிராமத்தில் குளிக்கச் சென்று எதிர்பாராத விதமாக உயிரிழந்த 2 சிறார்களின் குடும்பத்திற்கு, இறப்பு நிவாரண தொகையாக தலா ரூ.01.00 இலட்சத்திற்கான காசோலையினையும் மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.02.00 இலட்சம் உதவித்தொகையினையு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருக்கோஷ்டியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சௌமிய நாராயணன் திருக்கோவிலின் திருப்பாற்கடலில் கடந்த (08.12.2024) அன்று திருக்கோஷ்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலெட்சுமி மகன்கள் விஷ்ணு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஆகிய இரு சிறார்களும் குளிக்கச் சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு சிறார்களின் குடும்பத்தினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, இறப்பு நிவாரண நிதியாக தலா ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கிட உத்தரவிட்டார். அதன்படி, தலா ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையினை இன்று(டிச.26) கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேரில் சென்று அச்சிறார்களின் தாயாரிடம் வழங்கியதுடன், தனது சொந்த நிதியிலிருந்தும் ரூ.02.00 இலட்சம் உதவித்தொகையினை நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறினார். மேலும், அச்சிறார்களின் தாயாரின் கோரிக்கைக்கிணங்க, அவரின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தேவையான உதவிகளும் மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அக்குடும்பத்தினரிடம் தெரிவித்தார். உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கேசவதாசன், திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story