அரியமங்கலத்தில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
Tiruchirappalli King 24x7 |27 Dec 2024 12:59 PM GMT
75 போதை மாத்திரைகள், 2 போதை ஊசிகள் ஆகியவை பறிமுதல்
திருச்சி அரியமங்கலம், கணபதி நகர் அருகே அரிமங்கலம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை மாத்திரை விற்ற அரியலூர் மாவட்டம் கூத்தூர், வடக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (வயது37) மற்றும் அரியமங்கலம், காமராஜ் நகர், சௌகத்அலி தெருவைச் சேர்ந்த சானவாஸ் ஹூசைன் (வயது23) ஆகிய 2 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 75 போதை மாத்திரைகள், 2 போதை ஊசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story