செண்பகப்புதூர் ஊராட்சியில் ரூ.2 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி

செண்பகப்புதூர் ஊராட்சியில் ரூ.2 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி
X
செண்பகப்புதூர் ஊராட்சியில் ரூ.2 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி
செண்பகப்புதூர் ஊராட்சியில் ரூ.2 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செண்ப கப்புதூர் ஊராட்சியில் நடுப்பாளையம் வாய்க்கால் பாலம் முதல் வேடசின்னனூர் வாய்க்கால் வரை தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சார்பில் ரூ. 2 கோடியில் தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சத்தியமங்கலம் ஒன்றியக்குழு உறுப்பினர் வி.என்.சின்னசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் செண்பகப்புதூர் ஊராட்சி தலைவர் எம்.ராசாத்தி, துணைத்தலைவர் என். சிவக்குமார். வி.சி.கார்த்திகேயன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் அலுவலர்கள், ஊராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story