காரமடை: விபசார புரோக்கர்கள் 2 பேர் கைது !
Coimbatore King 24x7 |28 Dec 2024 8:14 AM GMT
பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபருக்கு நேற்று வாட்ஸ்-அப்பில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதற்கு அவர் பதில் அனுப்பிய போது ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி, உல்லாசமாக இருக்க விரும்பினால் காரமடை குளத்துபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு வாருங்கள் என்று கூறி உள்ளார். இது குறித்து அந்த வாலிபர் காரமடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தொடர்ந்து, காரமடை போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 இளம்பெண்களை மீட்டனர். அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்களான மேட்டுப்பாளையம் எஸ்.எம். நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது 26), நேருநகரை சேர்ந்த சசிகுமார் (39) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story